ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      இந்தியா
modi 2020 10 12

Source: provided

புதுடில்லி : மறைந்த பா.ஜ.க, தலைவர் விஜயராஜே நினைவாக, ரூ.100 நாணயத்தை, நேற்று பிரதமர் மோடி வெளியிட்டார்.

பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12-ல் பிறந்த அவர், 2001, ஜன.,25-ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூ.100 நாணயம் நேற்று வெளியிடப்பட்டது.

வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து