முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிம்ஸ் நோய் என்பது வெறும் வதந்தி: சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : கொரோனோ பாதிக்கபட்ட வர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரை கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய அளவிலான மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தாலுகா அளவிலான மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கொரோனோ பாதிப்பு 5 விழுக்காடுக்கும் குறைவாக குறைந்துள்ளது.

கொரோனோ குறைந்து வரும் நிலையில் மழைக்காலம் துவங்குவதால் கொரோனோ மட்டுமல்லாமல் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பண்டிகை மற்றும் மழைக்காலங்களில் கொரோனோ பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் கொரோனோ இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 1.5 ஆக குறைந்துள்ளது. கொரோனோ பாதிப்பு ஏற்பட்டால் தானாகவே மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கொரோனோவிற்கு 80 வகையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனோ பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் தேவைக்கு ஏற்ப காய்ச்சல் முகாம் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

கொரோனோ பாதிப்பிற்கு நிரந்தர தடுப்பு மருந்து வரும் வரை மக்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.  கொரோனோ பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து