முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பாண்டில் 2-வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை 99.11அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 99.90 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால் அணை நிரம்பும். அணையின் முழு கொள்ளளவு 93.45 டி.எம்.சியாகும். 

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அளவு வினாடிக்கு 26,102 கனஅடியிலிருந்து 27,212 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 64.71 டி.எம்.சி. தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இந்நிலையில் அணைக்கு விநாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வரத்து எதிரொலியாக நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர்  அணை 100 அடியை எட்டியுள்ளது.

அணையில் இருந்து 14,900 கன அடிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து