முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ துறையில் இந்தியர்கள் நோபல் பரிசு பெறுகிறார்களா? -ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அதிரடி கேள்வி

புதன்கிழமை, 14 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : இந்தியாவில் மருத்துவத் துறையில் ஆராய்ச்சியாளர்களை முறையாக ஊக்கப்படுத்தவில்லை என்றும், இந்தியர்கள் யாராவது மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். 

இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக தமிழக அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.  

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் மருத்துவத்துறையில் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

இந்தியர்கள் யாராவது மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் முறையாக ஊக்குவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிக்கப்படாததில் பல்வேறு அரசியல் நகர்வுகள் உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தனர். 

மேலும், இம்ப்ரோ மருந்து தொடர்பான ஆய்வறிக்கையை அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இன்றைக்கு (அக்.15) ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து