முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக தலைமை செயலாளரின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு

புதன்கிழமை, 14 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு  ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், கடந்த ஜூலை 1-ம் தேதியன்று புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றுக் கொண்டார்.

நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டதால், இவரை விட 6  மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பரிசீலனையில் இருந்தும், தலைமை செயலாளர் வாய்ப்பு சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.

ஆனால், அவரது பணிக்காலம் வரும் ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் புதிய அதிகாரியை நியமிப்பதற்கு பதிலாக சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் படி தமிழக அரசு மத்திய அரசுக்கு  பரிந்துரை ஒன்றை அனுப்பி இருந்தது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு, ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, தமிழக அரசின் தலைமைச்  செயலாளராக சண்முகம் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.  இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மத்திய பணியாளர் நிர்வாகத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.

இதனை ஏற்ற மத்திய அரசு, தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு அடுத்த வருடம் 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதுவரை 6 மாதங்கள்  சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 1985-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி இந்திய ஆட்சிப்  பணியில் சேர்ந்தார். சண்முகம் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து