முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமைச் செயலகத்தில் மீண்டும் கொரோனா பரவல்

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களில் தலைமைச் செயலக ஊழியர்கள் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடந்த மே மாதம் முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது.  முதலில் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் பின்னர் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் தொடக்கத்தில் இருந்து பழையபடி 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை 37 துறைகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களில் கடந்த மூன்று நாட்களில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்பது விதி. அதேபோல் முகக்கவசம், சமூகஇடைவெளி போன்றவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிகளும் அமலில் உள்ளது. 

ஆனால் இந்த விதிகளை ஊழியர்களும், தலைமைச் செயலகத்துக்கு வரும் பொதுமக்களும் முழுமையாக கடைப்பிடிக்காததே மீண்டும் கொரோனா தொற்று பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கொரோனா முதல் பரவல் எழுந்த போது தலைமைச் செயலகத்தில் 200 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் தொடங்கியுள்ள நிலையில் இது ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து