முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடியின் தாயார் தவுசாயம்மாளின் சாங்கிய நிகழ்வு: அமைச்சர்கள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையத்தை சேர்ந்த கருப்பக் கவுண்டரின்  மனைவியும், தமிழக முதல்வர்.எடப்பாடிபழனிசாமியின்  தாயாருமான தவுசாயம்மாள்  12.10.2020 அன்று காலமானார். அம்மையாரின்  மூன்றாம் நாள் காரியம் (சாங்கியம்) நேற்று (15.10.2020) சிலுவம்பாளையத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் அம்மையாரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் காரியம் (சாங்கியம்) நடைபெற்றது. 

மயானத்திற்கு தமிழக முதல்வர், அமைச்சர் பெருமக்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் காரியம் (சாங்கியம்) நடைபெற்ற இடத்திற்கு நடந்தே சென்று வந்தனர். தமிழக முதல்வரின் மூத்த சகோதரர் கோவிந்தராஜூ சாங்கியத்தை செய்தார்கள். அதன் பின்பு அம்மையாரது அஸ்தி காவேரி ஆற்றில் கரைக்கப்பட்டது.    அம்மையாரது காரியம் (சாங்கியம்) நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர்.சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர்கள், கட்சி நிருவாகிகள், உறவினர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து