முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் ஆம்னி பஸ் சேவை துவங்கியது : கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லை

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஏழு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் நேற்று முதல் ஆம்னி பஸ் சேவை துவங்கி உள்ளது. முதல்கட்டமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு மட்டும் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. 

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  அதே சமயம் ஆம்னி பஸ்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது.

பஸ்கள் ஓட்டப்படாத காலகட்டத்தில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்காமல் இருந்தனர். 

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று (16-ம் தேதி) முதல் ஆம்னி பஸ்கள் ஓடும் என்று அதன் உரிமையாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. முதல்கட்டமாக நேற்று சென்னைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. 

இதுபற்றி திருச்சி மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், திருச்சியில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு 150 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக 20 பஸ்கள் மட்டும் இயக்கப்பட உள்ளன. அதுவும் சென்னைக்கு மட்டுமே இயக்கப்படுகிறது. கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பழைய கட்டணமே வசூலிக்கப்படும். அரசு வழிகாட்டுதல்படி 60 சதவீத பயணிகள் மட்டுமே ஏற்றப்படுவர். முக கவசம் அணியாமல் வருபவர்கள் பஸ்சில் ஏற அனுமதி இல்லை. பயணிகளை இறக்கி விட்ட பின்,

கிருமி நாசினி மூலம் பஸ் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.  சாலை வரி ரத்து கோரிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், 6 மாதங்களுக்கு மேல் பஸ்களை இயக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காகவும் இப்போது பஸ்களை இயக்க முன்வந்துள்ளோம்.

இனிவரும் காலங்களில் பயணிகளின் ஆதரவை பொறுத்து சென்னைக்கும், மற்ற நகரங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து