எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்: இந்தியா பதிலடி

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      இந்தியா
KASHMIR 2020 10 16

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரகம் வாயிலாக அந்நாட்டு அரசுக்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. 

மான்கோட் செக்டாரில் இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து