முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக 23-ம் தேதி முதல் 12 இடங்களில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக மொத்தம் 12 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்குகிறார். 

பீகாரில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 3 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியும் களம் காணுகின்றன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

பிரதான கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தங்களது நட்சத்திர பேச்சாளர்களை பிரச்சாரத்தில் களமிறக்கி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், பா.ஜ.க. சார்பில் நரேந்திர மோடியும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் நடத்த உள்ளனர்.

இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மொத்தம் 12 இடங்களில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

பிரதமர் மோடியின் கூட்டங்கள் முதல்கட்ட தேர்தல் முடிந்த பின் வரும் 20-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.  இதற்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கான (என்.டி.ஏ) தேர்தல் அறிக்கையும் வெளியாகும் எனக் கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து