தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்-அண்ணா பல்கலை இணைந்து தோப்பூர் துணைக்கோள் நகரத்தில் கணினி மூலம் மனைகள் தேர்வு

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      தமிழகம்
Tamilnadu-housing 2020 10 1

Source: provided

மதுரை : மதுரை உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்டத்திற்குட்பட்ட மனை மேம்பாட்டுத் திட்டத்தில் உச்சப்பட்டி பகுதி-3, தோப்பூர் பகுதி-1 முதல் 3 வரையிலான திட்டங்களில் உள்ள 1121 பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவு மனைகளுக்கு எதிர்வரும் 19.10.2020 அன்று  காலை 10.00 மணி முதல் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கணினி மூலம் விண்ணப்பத்தாரர்களை ஒதுக்கீட்டிற்கு தேர்வு செய்யப்படவுள்ளது.  

கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்கள் நேரிடையாக ஒரே இடத்தில் பலர் கலந்து கொள்வதை தவிர்க்கும் பொருட்டு கணினி மூலம் நடைபெறும் குலுக்கலில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பணிகளை Youtube வழியாக பார்வையிடுவதற்கு நேரடியாக ஒளிபரப்பு (Live Streaming) வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நேரடி ஒளிபரப்பை காண்பதற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய இணையதளமான www.tnhb.tn.gov.in -ல் 19.10.2020 அன்று காலை 10.00 மணி முதல் இணையத்தில் இணையலாம். 

விண்ணப்பதாரர்கள் நேரில் வருவதை ‘கண்டிப்பாக தவிர்த்து’ தங்களது ஒதுக்கீட்டின் விபரங்களை இணையதள வசதி மூலம் நேரடியாக கண்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் விண்ணப்பதாரர்களுக்கென்று உதவி மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு,  12  அலுவலர்களின் கைபேசி எண்கள் 13.10.2020 அன்று வெளியான விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் 19.10.2020 அன்று காலை 11.00 மணி முதல் தொடர்பு கொண்டு தங்களது ஒதுக்கீடு தேர்வு செய்த விபரத்தை அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட செயற்பொறியாளர்  இருளப்பன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து