கொரோனா பாதிப்பு: வீட்டு தனிமையில் குலாம் நபி ஆசாத்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      இந்தியா
Ghulam-Nabi-Azad 2020 10 14

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை பணியாளர்கள், களப்பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது பரிசோதனை முடிவு தெரியவந்ததும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து