அ.தி.மு.க. 49-வது ஆண்டு துவக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் இன்று முதல்வர் எடப்பாடி கொடியேற்றுகிறார்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      தமிழகம்
Edappadi 2020 10 16

Source: provided

சேலம் : அ.தி.மு.க. வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லம் அருகே இன்று கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். 

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 17-ம் தேதி 49- வது ஆண்டு தொடங்குகிறது. சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கோலாகல துவக்க விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இதனை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். 

இந்த நிலையில் அ.தி.மு.க. வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லம் அருகே இன்று கொடியேற்றி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து சேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடிபழனிசாமி இன்று (17.10.2020) காலை 7.00 மணிக்கு கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பிப்பார். 

இதனையொட்டி காலை 5.30 மணிக்கு சேலம் நாட்டாண்மை கட்சி அலுவலக வளாகத்தின் முன்பு இருந்து இரண்டு வாகனங்கள் மூலம் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து