முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி : துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் 31வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. 

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது.

பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 48(39) ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக சமி மற்றும் எம்.அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியின் சார்பில், கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடியில் மயங்க் அகர்வால் 45(25) ரன்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய கிரிஸ் கெயில், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிக்சர்களாக விளாசிய அதிரடி மன்னன் கிரிஸ் கெயில் 36 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் வெற்றிபெற 1 ரன் தேவைப்பட்டநிலையில் கெயில் 53(45) ரன்களில் ரன்-அவுட் ஆனார்.

இறுதியில் கே.எல்.ராகுல் 61(49) ரன்களும், நிகோலஸ் பூரன் 6(1) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பஞ்சாப் அணி 20 ஒவர்களில் 2 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து