முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடனுக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரம்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயககட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்த சூழலில் கடந்த 1-ந் தேதி ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்காக ராணுவ ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற டிரம்ப், தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், வரும் 19-ம்தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியாவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் ஜோ பிடனுக்காக அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பிரச்சாரத்தில் டிரம்ப்பிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பார் என்று தெரிகிறது. டிரம்பை விட பிடனுக்கு தான் அதிக மக்கள் ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ஒபாமாவின் பிரச்சாரம் குறித்து தனது ஆதரவாளர்களிடையே டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ‘ஒபாமா ஒரு பிரயோஜனமற்ற பிரச்சாரகர். இது 2016 ஆம் ஆண்டைப் போலவே எனக்கு ஒரு நல்ல செய்தி. அந்த தேர்தலில் அவர்கள் மோசமான பணிகளை செய்தார்கள், அதனால்தான் நான் உங்கள் ஜனாதிபதியாக இருக்கிறேன்’ என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து