முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி வில்லியர்ஸ் அதிரடி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 33-வது ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதன்படி ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் சுமித் 57 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளும், சாஹல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் பட்டிக்கல் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அந்த ஜோடியில் பிஞ்ச் 14(11) ரன்களும், பட்டிக்கல் 35(37) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த நிலையில் 43(32) ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக டி வில்லியர்ஸ் மற்றும் குருகீரத் சிங் அகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய டி வில்லியர்ஸ் எதிரணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 

இறுதியில் அரைசதத்தை பதிவு செய்த டி வில்லியர்ஸ் 55(22) ரன்களும், குருகீரத் சிங் 19(17)ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி 19.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக கோபால், கார்த்திக் தியாகி மற்றும் தேவாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து