முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் தோற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன்: டிரம்ப்

ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : தேர்தலில் ஒருவேளை தோற்றுப் போனால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது பிரசாரத்தில் கூறினார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்குவதையொட்டி, இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

நான் ஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்தீர்களா? வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் தோற்று விட்டால் அப்புறம் தனது வாழ்க்கை வீண் என கருதி நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன். எனக்கு தெரியாது. நான் இந்த உலகத்திலேயே சிறப்பான பணம் வசூலிப்பாளன். நான் நினைத்து இருந்தால் இன்னும் அதிகமான பணத்தை தேர்தல் செலவீனத்துக்கு பெற்றிருக்க முடியும்.

ஆனால் எனக்கு அது வேண்டாம். அமெரிக்க அதிபர் வரலாற்றில் அதிபர் தோரணையில் சிறப்பாக நடந்து கொண்டதே நானாகத்தான் இருப்பேன். ஆனால் ஆப்ரஹாம் லிங்கன் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர் தொப்பி அணியும் ஸ்டைலை முறியடிப்பது ரொம்ப கஷ்டம். இவ்வாறு அவர் கூறினார். 

தேர்தல் செலவுக்காக டொனால்ட் டிரம்ப் தரப்பு 247 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், தரப்பில் 383 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி திரட்டி உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து