இந்தியா வங்காளதேசம் இடையே 28-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை

ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2020      உலகம்
India-Bangladesh 2020 10 18

Source: provided

டாக்கா : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அளவிலான விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், மெல்ல மெல்ல விமான சேவைகளை மீண்டும் பல்வேறு நாடுகள் அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. 

அந்த வகையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுடனான விமான சேவையை அண்டை நாடான வங்காளதேசம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு  ஏர் பப்பிள் முறையில் விமான சேவையை மீண்டும் இயக்க வங்காளதேசம் முடிவு செய்துள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை பின்பற்றி  “ஏர் பபிள்” என்ற முறையில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த “ஏர் பபிள்” முறையைப் பின்பற்றி வரும் 28-ம் தேதி முதல் இந்தியா- வங்காளதேசம் இடையே வாரத்திற்கு 28 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து