முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்டிகை நாட்களுக்கு பிறகுதான் கொரோனா பாதிப்பு அதிகரித்தது: விழிப்புடன் இருக்க சுகாதார செயலாளர் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பல மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பிறகுதான் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் பாலாஜி, போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு, சாலை விதிகளை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனர். 

பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சற்று ஆறுதல் தருகிறது. கொரோனா பாதிப்பு குறைகிறது என பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. ஏனென்றால், பல மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பிறகு தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமானது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். அதே போல் பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்க வெளியே செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும். இது போன்ற நேரங்களில் பொருட்கள் வாங்க பொது மக்கள் அதிகம் வெளியே வருவார்கள் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என வணிகர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் தற்போது குறைய தொடங்கி உள்ளது. இது தொடர்ந்து நீடித்து கொரோனா முற்றிலுமாக இல்லை என்ற நிலையை அடைய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து