முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2-வது முறையாக அரசு பயிற்சி வழங்காது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார். மேலும் முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2-வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது என்று அவர் தெரிவித்தார். 

மேலும், நீட் தேர்வுக்காக அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து