முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை-மும்பை இடையே மீண்டும் விமான சேவை

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரையில் உள்ள ஏர் இந்தியா நிறுவன அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இந்த விமான சேவை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து, வழக்கமான விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் மும்பை- சென்னை- மதுரை- சென்னை-மும்பை விமான சேவையும் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.

அதன்படி, அந்த விமானம் காலை 9.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, காலை 11.15 மணிக்கு சென்னை வந்தடைகிறது. அதன்பின்னர் அங்கிருந்து 12.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரை வந்தடைகிறது.அதன்பின்னர் அதே விமானம் மதுரையில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு சென்னை செல்கிறது.

அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 6.15 மணிக்கு மும்பையை சென்றடைகிறது. இந்த விமானம் தினமும் இதே நேரத்தில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வருகையை பொறுத்து விமான சேவைக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம். இதற்கான டிக்கெட்டுகளுக்கு www.airindia.in என்ற இணையதளத்திலும், மதுரை விமான நிலையத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து