லா லிகா கால்பந்து : பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      விளையாட்டு
Football 2020 10 19

Source: provided

மாட்ரிட் : ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா நடந்த கெடாபி கிளப்புக்கு எதிரான ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 56-வது நிமிடத்தில் கெடாபி வீரர் ஜெமி மாட்டா பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.

பார்சிலோனா முன்னணி வீரர்கள் லயோனல் மெஸ்சி, கிரிஸ்மான் நெருங்கி வந்து சில வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இந்த சீசனில் பார்சிலோனா அணியின் முதல் தோல்வி இதுவாகும். இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 7 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.

இதே போல் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிறிய அணியான கேடிஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. கேடிஸ் வீரர் அந்தோணி லோஜனோ 16-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

கேடிஸ் அணி 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ரியல்மாட்ரிட்டை வீழ்த்தியிருக்கிறது. ரியல்மாட்ரிட், கெடாபி, கேடிஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் டாப்-3 இடங்களில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து