முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயார் மறைவு : முதல்வர் எடப்பாடியை சந்தித்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறினர்

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நேற்று 9–வது நாளாக ஏராளமான பேர் நேரில் வந்து அவரது தாயார் தவுசாயம்மாள் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நல குறைவால் கடந்த 12-ம்  தேதி நள்ளிரவு காலமானார். உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட சுற்றுப்பயணங்களை ரத்து செய்து விட்டு சென்னையில் இருந்து இரவோடு இரவாக தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். 

சேலத்தில் தாயாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதோடு, இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தாயாரின் காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அங்கேயே தனது வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் காரியங்களை முடித்து விட்டு, கடந்த ஞாயிறன்று இரவு சென்னை வந்து சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் தவுசாயம்மாளின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்  முதல்வரின்  இல்லத்துக்கு சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முதல்வரின் முகாம் அலுவலகத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், எம்.பி., ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி., மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், திரைப்பட நடிகையும், ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் சி. விஜயராஜ்குமார், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமைச் செயல் அலுவலர் சந்தோஷ் கே. மிஸ்ரா ஆகியோரும்,   தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர்  வெள்ளையன், குடிசவளை வடபழனி மருத்துவமனையின் மண்டல இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாண்டே, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தலைவர் எஸ். சீனிவாசன், அனைத்து ஜெயின் சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள், வன்னியர் ஷத்ரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள், தமிழக தலைமை அகமுடையார் சங்க நிர்வாகிகள், சென்னை மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை நிர்வாகிகள், திரைப்பட நடிகை குஷ்பு,  திரைப்பட நடிகர்கள் பிரபு, எஸ்.வி. சேகர், ஜீவா, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, திரைப்பட இயக்குநர் ஆர்.பி. சௌத்ரி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கௌரவத் தலைவர் அபிராமி இராமநாதன் மற்றும் பொதுச் செயலாளர்  பன்னீர்செல்வம் ஆகியோர் தவுசாயம்மாளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, முதல்வருக்கு ஆறுதல் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து