முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலர் வீரவணக்க நாள்: தேசிய நினைவிடத்தில் அமித்ஷா மரியாதை

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : காவலர் வீரவணக்க நாளையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

நாட்டைப் பாதுகாப்பதற்காக வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவுச் சின்னத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். 

இதேபோல் அந்தந்த மாநில காவல்துறை சார்பில் காவலர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது. உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு புகழாரம் சூட்டி சமூக வலைத்தலங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து