முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தேனி மாவட்டம் சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும், தண்ணீர் திறந்து விடக் கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடிமக்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து  முதல் போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும்  மற்றும்  பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 26.10.2020 முதல் 15.3.2021 வரை, முதல்  51  நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும்,  அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கன அடி வீதமும்,  கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதமும், மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 

இதனால் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து