முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் ஆய்வு: ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

அங்கு ரூ.700 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உணவுப்பொருள் தொழிற்சாலை விரிவாக்கத்தை அவர் தொடங்கி வைப்பதுடன், ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலையையும் திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்ல இருந்த நிலையில், அவரது தாயார் மறைந்த செய்தி கேட்டு, சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு சேலம் சென்றார். இறுதிச்சடங்கு மற்றும் காரிய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். 

தற்போது, மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். அந்த வகையில், இன்று (வியாழக்கிழமை) காலை 8.45 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்படுகிறார். திருச்சி விமான நிலையம் சென்றவுடன், அங்கிருந்து காரில் விராலிமலைக்கு செல்கிறார். 

சென்னையில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, ஐ.டி.சி. நிறுவனம் ரூ.700 கோடி செலவில் அங்கு உணவுப்பொருள் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். 

மேலும், விராலிமலையில், சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்ற வெண்கல சிலையை அவர் திறந்து வைக்கிறார். விராலிமலையில்தான் ஜல்லிக்கட்டில் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

பின்பு, தமிழக மக்களின் 100 ஆண்டு கனவுத்திட்டமான காவிரி-வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தில் மிக முக்கிய அங்கமான 1088 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளமான கவிநாடு கண்மாயை அவர் பார்வையிடுகிறார்.  பிறகு அங்கிருந்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு இதயநோய் சிகிச்சைக்கான கேத்லாப் வசதியை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களையும் அவர் திறந்து வைக்கிறார். 

அதன்பின்னர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன நிர்வாகிகள், விவசாயிகள், மகளிர் சுயஉதவி குழுவினரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.  

இந்த மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் எந்த வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற ஆய்வையும் அவர் நடத்துகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து