முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இருந்து ஏக்நாத் கட்சே விலகல் : தேசியவாத காங்கிரசில் இணைகிறார்

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, பா.ஜ.க.வில் இருந்து விலகினார்.

மகாராஷ்டிராவில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. மூத்த தலைவரான இவர், ஊழல் புகாரில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் சேர்ந்து விட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், இதனை பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்திருந்தார். பா.ஜனதாவில் இருந்து விலகியதாக வெளியான தகவலை ஏக்நாத் கட்சேவும் மறுத்திருந்தார். 

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக பாடுபட்ட ஏக்நாத் கட்சே ராஜினாமா செய்ததாக தேசியவதாத காங்கிரஸ் தலைவரும் மாநில அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் நேற்று கூறினார்.

அவரை  தேசியவாத காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேர்க்க உள்ளதாகவும் கூறினார்.  அதனை உறுதி செய்யும் வகையில், ஏக்நாத் கட்சே பா.ஜ.க.வில் இருந்து விலகினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி, மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து