முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா பேரவை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்: நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு: வெற்றி கோப்பையையும் வழங்கினார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அம்மாவின் அருளாசியுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆசியோடுகழக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்க்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் பாராட்டி 50,000 பொற்கிழி மற்றும் வெற்றி கோப்பையை வழங்கினார் 

அம்மாவின் அருளாசியுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவை சார்பில் தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது  இதில் நீட் தேர்வில்720மார்க்கு 664 மார்க் எடுத்து இந்திய அளவில் சாதனை படைத்த தேனி மாவட்டம் சில்வார்பட்டி ,அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் என்.ஜூவித்குமாருக்கு பாராட்டு விழா 50,000 ரூபாய் பொற்கிழி மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார் பாரதியுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்புரை ஆற்றினார் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன்,பாராட்டுரை ஆற்றினார்.  இந்த முகாமினை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கிவைத்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் 50,000 ரூபாய் பொற்கிழியை வழங்கினார். 

இதில் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் பேராசிரியர்கள் எம்.கண்ணன், ஜேனட்சங்கர்,எஸ்.ராஜு, எம்.புவனேஸ்வரன், புலவர் சங்கரலிங்கம், அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி,மற்றும் கழக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர் 

இதில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது; மாணவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக அம்மா அரசு உள்ளது அம்மாவின் வழியில் தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் மாணவ சமுதாயத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றனர் 

நீட் தேர்வில் பல்வேறு விவாதம், சர்ச்சை இருந்தபோதிலும் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்று சாதித்த இந்த இளைஞனுக்கு இருகரம் கூப்பி வாழ்த்துகிறேன்  இந்த சாதனை சாதாரண சாதனை அல்ல வரும் தலைமுறைக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் நம்பிக்கையின் விதையாகும் இளையத் தலைமுறைக்கு இது முன் உதாரணமாகும் 

அரசுப்பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதிக்க முடியும் என்று இதன்மூலம் இந்த மாணவன் சாதித்து காட்டியுள்ளான்  நீட் தேர்வை சில ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க அம்மாவின் அரசு கோரிக்கை தொடர்ந்து வைத்தது அது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவனுக்கு அரசின் சார்பில் நீட் தேர்வு மையங்களையும் முதலமைச்சர் உருவாக்கி கொடுத்தார் 

நீட் தேர்வில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக முதலமைச்சர் மசோதா நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்

தற்போது கூட முதலமைச்சர் வழிகாட்டுதல் படி 5 அமைச்சர்கள் நேரில் சென்று கவர்னர்னிடம் விரைந்து ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைத்தனர்  அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முதலமைச்சர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார் அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார் 

முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என அரசுப்பள்ளி மாணவர் ஜீவித்குமார் நிரூபித்து காட்டி உள்ளார், உழைப்பவர்கள் என்றும் வீண் போவதில்லை, இன்றைக்கு இவரின் வெற்றிக்கு அம்மாவின் மடிக்கணினி திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருந்துள்ளது 

நீட் தேர்வு விலக்குக்காக தமிழக அரசு நீதிமன்றம் வரை சென்றுள்ளது,  விடா முயற்சி எடுத்தால் மாணவர்கள் சாதிக்க முடியும், நீட் தேர்வுக்கு நான் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை, சாதித்தவர்களின் வரலாற்றை மாணவர்கள் திரும்பி பார்க்க வேண்டும், அரசு பள்ளி படித்த மாணவர்கள் தான் இன்று பல உலக சாதனையை படைத்துள்ளார்கள் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் முயன்றால் வெற்றி பெறலாம்

அதற்கு இந்த மாணவனே சாட்சி நீங்களும் இதுபோன்று முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும்  தகவல் தொழில்நுட்பத்தை சரியாக கையாள வேண்டும், மாணவர்களுக்கு முன் வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது நீட் தேர்வு மட்டுமே வாழ்வில்லை உங்களைப் போன்ற மாணவர்களுக்கு நல்ல வழி காட்டும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இதன் மூலம் நீங்கள் பயன்பெற்று குரூப்-1 குரூப் 2 போன்ற பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது அதை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  சவால்களை நீங்கள் எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் ஒவ்வொருரிடமும் ஒவ்வொரு ஆற்றல் உள்ளது

அந்த நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் உயர் காவல் துறை அதிகாரியாகவும் இப்படி பல்வேறு துறைகளில் நீங்கள் சாதிக்கலாம்  தமிழகத்தில் உயர்க்கல்வியின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது, மடிக்கணினியின் விலை 1 கோடியே இருந்தாலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என சொன்னவர் புரட்சி தலைவி அம்மா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அம்மாவின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

கவல் தொழில்நுட்ப பிரிவில் புகழ்பெற்ற ஜோகோ நிறுவனம் தமிழகத்தில் ஒரு புரட்சியை உருவாக்க போகிறது தகவல் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா சென்று வேலை பார்க்க தேவையில்லை அவர்கள் கிராமத்திலிருந்து வேலை பார்க்கலாம் அதற்கு ஏற்றவாறு கிளையை இங்கே உருவாக்க உள்ளது

இது எல்லாம் இளைஞர் நலனுக்காக முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்  புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தை தலைமை அதிகாரி இருப்பவர் மதுரையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை ஆவார் அதுமட்டுமல்லாது என்று தமிழகத்தின் கடைக்கோடி உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவர் தான் டாக்டர் அப்துல் கலாம் ஆவார் அதேபோல் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து அதன் மூலம் இன்றைக்கு நாட்டிற்கே முதலமைச்சர் உள்ளார் நமது முதலமைச்சர் அதேபோல்தான் துணை முதல்வர்  ஆவார் என்று பேசினார் 

செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது: 

இந்தியா முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர் இதில் 7.71 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் தமிழகத்தில் 99,510 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 57,215 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்  கடந்த ஆண்டில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் இந்தாண்டு 55.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 9 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சகவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ளார்

இதன் மூலம் கூடுதலாக 300 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கும்  தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்   ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் முதலமைச்சர் அனுமதி பெற்று தந்ததுள்ளார்  இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை 26.3 சகவீதம் ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை 49 சகவீதமாக உள்ளது

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கைபடி இந்திய அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் 8 மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது  தமிழகத்தில் 56 பல்கலைக்கழகமும்,2,466 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன தமிழகத்தில் 1லட்சம் மக்கள் தொகைக்கு 35 கல்லூரிகள் வீதமும்,ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கை 924 பேர் வீதம் உள்ளனர் என்று கூறினார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து