ஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்: மத்திய பிரதேசத்தில் மேலும் 6 பேர் கைது

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      விளையாட்டு
Madhya-Pradesh-2020 10 21

Source: provided

இந்தூர் : மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

கடந்த 11ம் தேதி 6 பேரும், 15ம் தேதி 9 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மின்னணு சாதனங்கள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தூரின் துகோகஞ்ச் பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து