முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே முதன் முறையாக சோலாரில் இயங்கி வரும்: புதுவை விமான நிலையம்

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

நாட்டிலேயே முதன் முறையாக புதுச்சேரி விமான நிலையம் முழுக்க முழுக்க சோலாரில் இயங்கி வருகிறது.

புதுச்சேரியை அடுத்த லாஸ்பேட்டையில் அமைந்துள்ள விமான நிலையத்தில், மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் மூலம் ரூ. 2.8 கோடியில் விமான நிலைய ஓடுபாதை அருகே 500 கிலோவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மின் உற்பத்தி நிலையம் மிக உயர்ந்த பாலி கிரிஸ்டலின் சோலார் பி.வி பேனல்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தினமும் 2000 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுவதால் புதுச்சேரி விமான நிலையம் முழுக்க முழுக்க சோலாரில் இயங்கி வருகிறது. 

முழுக்க முழுக்க சோலார் மூலம் இயங்குவதால் புதுச்சேரி விமான நிலையத்திற்கு மாதம் ரூ.10 லட்சம் மின்கட்டணம் மிச்சமாகிறது. 2025-ம் ஆண்டுக்குள் தென் மாநிலங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் முழுமையாக சூரியமின் சக்திக்கு மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தென் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் 8 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து