முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புதிய மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் அறிவிப்பு

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் என 7 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.  வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.  நெல்லை மாவட்டத்தில்  நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.  தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து