முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவுக்கு பிறந்த நாள்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.  அந்த கடிதத்தில், உங்கள் பிறந்தநாளில் எனது வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து