ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு 13.3 ஒவரில் எளிதாக வெற்றி பெற்றது

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      விளையாட்டு
ips-cri

ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 84 ரன்களே அடித்தது. மோர்கன் அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்தார். ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். 

பின்னர் 85 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் 25 ரன்னிலும், பிஞ்ச் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 6.2 ஓவரில் 46 ரன்கள் சேர்த்தது. 

அதன்பின் வந்த குர்கீரத் சிங் மான் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்களும் அடிக்க ஆர்சிபி 13.3 ஓவரில் 85 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து