முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியனில், பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

சார்ஜா : சார்ஜாவில் வானியல், விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா கூறியதாவது:-

சூரியனில் கருப்பு புள்ளி என்றால் அது உண்மையில் கருப்பான நிறத்தில் காணப்படும் புள்ளி அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் வெகு தொலைவில் நமக்கு கரும் புள்ளியாக தெரிகிறது.

கருப்பு புள்ளியை சுற்றி உள்ள இடத்தில் வெப்பம் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது என்றால் புள்ளி உள்ள இடத்தில் வெப்பம் சுமார் 4 ஆயிரத்து 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம். பொதுவாக இதுபோன்ற சூரிய புள்ளிகள் 11 ஆண்டுகால இடைவெளியில் தோன்றுகிறது.

தற்போது பூமியை விட பெரிய அளவிலான கருப்பு புள்ளியை சார்ஜா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த சூரிய புள்ளிகளை ரேடியோ டெலஸ்கோப் எனப்படும் சிறப்பு தொலைநோக்கி கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் பூமியை விட பெரிதான அளவில் உள்ளது என தெரியவந்துள்ளது. இந்த கருப்பு புள்ளிக்கு சைக்கிள் 25 என பெயரிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து