முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு கட்டுப்பாடு

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வெங்காயம் விலை கடந்த சில நாட்டுகளாக கடுமையான ஏற்றம் கண்டுள்ளது. மொத்த விற்பனை இடத்திலேயே ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. சில்லரை வணிகர்கள் 2-டன் அளவிற்கும், மொத்த விற்பனை வணிகர்கள் 20-டன்கள் வரை இருப்பு வைக்கலாம் எனவும் மத்திய நுகர்வோர் நலத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து