முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி உரிய அனுமதியின்றி தாடி வைத்திருந்த இஸ்லாமிய காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட காலமாக தாடியை வளர்த்து வருகிறார்.  அந்த தாடியுடனே தான் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், பாக்பத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் திடீரென்று இந்த்சர் அலியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். சஸ்பெண்டுக்கான காரணமாக, சம்பந்தப்பட்ட காவலர் விதிமுறைகளை மீறி உரிய அனுமதியின்றி தாடி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவலர்கள் தாடி வளர்க்கக் கூடாது என்று காவல்துறையில் விதிமுறை உள்ளது. பலமுறை அறிவுறுத்தியும் தாடி எடுக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. அபிஷேக் சிங் கூறியுள்ளார். 

இந்நடவடிக்கை குறித்து இந்த்சார் அலி கூறுகையில்,  1994-ம் ஆண்டு கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்ந்தேன். அப்போதே லேசான தாடி இருந்தது. அதற்கு பிறகும் தாடி வைத்தே வருகிறேன். நான் எத்தனையோ இடத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கு இப்படியொரு பிரச்சினை வந்தது கிடையாது.

இந்த தாடி சம்பந்தமாக நான் பலமுறை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனாலும் அதில் ஒன்றிற்கு கூட இதுவரை பதில் இல்லை என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து