முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் சரணடைந்த 2 பயங்கரவாதிகள்

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் முன் நேற்று முன் சரணடைந்தனர். தங்கள் பெற்றோர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய ஒப்புக்கொண்டனர்.

வடக்கு காஷ்மீரில் உள்ள சோபூரின் ஷல்போரா துஜார் ஷரீப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

இதை தொடர்ந்து அந்த பகுதியில்  பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.  இந்த நடவடிக்கையில் ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் ஆகியவை இணைந்து ஈடுபட்டன.  தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பயங்கரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டபோது, அவர்கள் சரணடைய அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

இதன் விளைவாக, அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சரணடையும்படி அவர்களை வற்புறுத்துவதற்காக என்கவுன்டர் தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

பாதுகாப்புப் படையினரின் பெரும் முயற்சிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளின் காரணமாக, பயங்கரவாதிகள் இறுதியில் கூட்டுப் படைகளுக்கு முன்பாக சரணடைந்தனர்.

அவர்கள் போமாயில் வதூரா பேயினில் வசிக்கும் அபிட் முஷ்டாக் தார் மற்றும் மெஹ்ராஜ்-உ-தின் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய பயங்கரவாதிகளுக்கு எங்கள் முழு ஆதரவும் கிடைக்கும்.நாங்கள் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு சந்திப்புகளின் போது சரணடைய ஒரு வாய்ப்பை வழங்குகிறோம், ஏனெனில் அவர்கள் எங்கள் சொந்த மக்கள் என்று காவல் ஆய்வாளர் (காஷ்மீர்) விஜய்குமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து