முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் முதல்வர் எடப்பாடி நலம் விசாரிப்பு

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். 

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை, அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்த போது கடந்த 13-ம் தேதி இரவு அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரது இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யும் ஆஞ்ஜியோ பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை, அப்போலோ மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறும் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சரின் உதவியாளர்கள் தெரிவித்து இருந்தனர். 

இந்நிலையில், நேற்று  (23.10.2020) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்தித்து அவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.  அங்கிருந்த அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரிடமும் மற்றும் மருத்துவர்களிடமும் அன்னாரது உடல்நலம் குறித்து விசாரித்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து