முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக இன்று டார்ஜிலிங் செல்கிறார் ராஜ்நாத்சிங்

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 2 நாள் பயணமாக இன்று டார்ஜிலிங் செல்கிறார்.

டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களுக்கு 2 நாள் பயணமாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்ல உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

அக்டோபர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் டார்ஜிலிங் மற்றும் சிக்கிமில் உள்ள ராணுவ தளங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்ல உள்ளார். பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்களுடன் இணைந்து தசரா விழாவை கொண்டாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து