2-வது இருதய அறுவை சிகிச்சை: நலமாக இருப்பதாக நடிகர் அர்னால்ட் டுவிட்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      உலகம்
Arnold 2020 10 24

Source: provided

வாஷிங்டன் : 2-வது இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் நலமாக இருப்பதாக டுவிட் செய்து உள்ளார்.

73 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக மருத்துவமனையில் படுக்கையில் இருந்து ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளார். நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக 2018-ம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

ஐந்து குழந்தைகளுக்கு தந்தை அர்னால்டு  அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன்னைப் பற்றிய புகைப்படத்தைப் வெளியிட்டு உள்ளார். அதில் தான் நன்றாக இருப்பதாக கூறி உள்ளார்.  அவர் தனது டுவிட்டரில்,   கிளீவ்லேண்ட் கிளினிக்கில் உள்ள குழுவுக்கு நன்றி, எனது கடைசி அறுவை சிகிச்சையிலிருந்து எனது புதிய நுரையீரல் வால்வுடன் ஒரு புதிய பெருநாடி வால்வு பொருத்தப்பட்டு உள்ளது.

நான் தற்போது அருமையாக உணர்கிறேன், ஏற்கனவே கிளீவ்லேண்டின் தெருக்களில் உங்கள் அற்புதமான சிலைகளை கண்டு அனுபவித்து வருகிறேன். எனக்கு சேவை செய்த செவிலியருக்கும் நன்றி என கூறி உள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து