முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு சலுகை: மத்திய அரசு உத்தரவு

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தவறாமல் கடனுக்கான தவணை செலுத்தியவர்களுக்கு சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பரவலை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கான மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிக்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து 6 மாதங்களுக்கு தவணை காலத்தை நீட்டித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தவணை காலத்திற்கு வட்டிக்கு வட்டி விதிக்கக் கூடாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து ரூ. 2 கோடி வரையிலான கடன்களை பெற்று தவணை நீட்டிப்பு கோரியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப் படாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் 6 மாத தவணை நீட்டிப்பை தேர்வு செய்யாத கடன்தரார்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க ரிசர்வ் வங்கி ஆளுமையின் கீழ் உள்ள வங்கிகளுக்கு நிதியமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையிலான 6 மாத தவணை செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கான சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து