ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனைக்கு தடை: மத்திய அரசு உத்தரவு

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      இந்தியா
central-government 2020 10 24

Source: provided

புதுடெல்லி : இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில், நாடு முழுவதும் 4,000 ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றின் மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்களுடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மது பானங்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை ஒன்றில், வெளிநாட்டு பொருட்கள் எதுவும் இனி நேரடியாக கொள்முதல் செய்யப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக முப்படை உயர் அதிகாரிகள் ஒப்புதலோடு இந்நிலைப்பாட்டை எட்டி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து