முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் முதலீட்டை ஈர்ந்து சாதனை படைத்த முதல்வர், துணை முதல்வருக்கு தொழில் கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு விழா: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிகளவில் தொழில் முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தொழில் கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார்.  

கொரோனா நோற்றுநோய் காலத்தில் பாரத பிரதமரே பாராட்டும் வகையில் சிறப்பாக நோய்த்தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாது, இந்த கொரோனா காலத்தில் தமிழகத்திற்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து இந்தியாவிலேயே தமிழகம்தான் தொழில் முதலீடுகளை அதிகமான பெற்று தந்து மாநிலம் என்ற பாராட்டைப் பெற்று அதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த தமிழக முதல்வருக்கும், அவருக்கு உறுதுணையாய் இருக்கும் துணை முதல்வருக்கும் மற்றும் மூத்த அமைச்சர் பெருமக்களுக்கும், தொழில் துறை அமைச்சருக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கும் மற்றும் சிறு குறு தொழில் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் மாபெரும் விழா மதுரை மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில் மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கத்தில் நடைபெற்றது. 

இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் விசாகன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்புரை ஆற்றினார். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், மடீட்சியா தலைவர் முருகானந்தம்,ரோட்டரி ஆளுநர் ஜெயக்கண், கப்பலூர் தொழில்பேட்டை தலைவர் ரகுநாத ராஜா, அரிமா முன்னாள் ஆளுனர் ராமசாமி, சேதுபதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி,   வசுதாரா குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் விவேகானந்தன், தாம்ப்ராஸ் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர். 

விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, 

ஜெயலலிதாவுக்கு ஈடு இணையானவர் யாரும் இல்லை.  ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றும் முதல்வர் நமக்கு கிடைத்துள்ளார்.  முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்கும் பொழுது பேசிய பேச்சுக்கள் இப்பொழுது மாறி உள்ளது.  தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை புள்ளி விபரங்கள் கொடுத்தும் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.  இங்கு நடைபெற்ற விழாவில் வெள்ளை அறிக்கை கேட்கும் ஸ்டாலினுக்கு உண்மை அறிக்கையை இங்கே பேசியவர்கள் தங்கள் பேச்சின் மூலம் வழங்கியுள்ளனர்.  

எளிய, சாமானிய, சரித்திர முதல்வராக முதல்வர் திகழ்ந்து வருகிறார்.  தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திலும் 40,718 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. ஸ்டாலினுக்கு வெள்ளை உள்ளம் இல்லாததால் வெள்ளை அறிக்கை கேட்கிறார். ஸ்டாலின் மனதில் ஒரு சொட்டு ஈரம் கூட கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கிள் விண்டோ சிஸ்டம், தி.மு.க. ஆட்சியில் மல்டி விண்டோ சிஸ்டம் இருந்தது. கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும்  என அறிவித்த ஒரே முதல்வர் நமது முதல்வர். 

தடுப்பூசி வழங்குவதில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை இன்னும் ஈர்க்க நடவடிக்கை, தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.  விரைவில் தென் தமிழகம் தொழில் வளர்ச்சி பெறும்.  தமிழக அரசின் செயல்பாடுகளை ஸ்டாலின் மக்களிடம் திசை திருப்பி பேசி வருகிறார்.  அ.தி.மு.க. அரசு அறிவித்த நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

ஒரு மாநிலம் நன்றாக செயல்பட்டால் தான் முதலீடுகளை ஈர்க்க முடியும். தொழில் முதலீட்டுக்களுக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். எளிய முதல்வராக நமது முதல்வர் செயல்படுவதை எதிர்க்கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 2021-ல் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று சாதனை படைப்பார். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து