கேரளாவில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும்: வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Indian-Meteorological 2020

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை 28-ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை இம்மாதம் 15-ம் தேதியே தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் தாமதமாக நாளை 28-ம் தேதி தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் வடகிழக்கு பருவமழையும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.   வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கேரளாவில் இன்று முதல் கனமழை பெய்யுமென்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுமென்றும், கோட்டயம், பத்தினம்திட்டா, இடுக்கி மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து