கன்னியாகுமரி தொகுதியில் காங். மீண்டும் போட்டியிடும் கே.எஸ்.அழகிரி அறிக்கை

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      தமிழகம்
KS-Alagiri 2020 10 26

Source: provided

சென்னை : கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது.

நரேந்திரமோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்து விட்டது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையில் ஈடுபாட்டுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவரப் போகின்றன. மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து