முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களுக்கு வருகை தரும் சரித்திர சாதனை திட்டங்களை தந்திட்ட முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி : அம்மா பேரவை சார்பில் தீர்மானம்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் முதல்வரின்  வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றி ஆலோசனை வழங்கினார். 

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு:-

அம்மாவின் நல்லாசியுடன் சரித்திரம் போற்றும் சாதனை படைக்கும் வகையில் எளிய முதல்வராய், விண்ணை முட்டும் சாதனை படைத்திட்டு, எட்டரை கோடி மக்கள் நலனே, தன் நலன் என்று சாதனை படைத்திட்ட சாதனை நாயகன்,  தன் அளப்பறியா உழைப்பால் உலகமே அச்சுறுத்தி  கொண்டிருக்கும் இந்த கொடிய கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று பாரத பிரதமர் மூலம் பாராட்டைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்வர் எடப்பாடியார், இந்த சாதனை திட்டங்களுக்கு துணையாக நின்று துணை முதல்வர் ஓ.பி.எஸ். திகழ்ந்து வருகிறார் என்பதை மாநில அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் பெருமையுடன் சுட்டிகாட்டிகிறது. 

இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கங்களை தாங்கள் சுவாசிக்கும் மூச்சாக நினைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் முதல்வரும், துணை முதல்வரும் செயலாற்றி வருவதை இந்த நாடு நன்கு அறியும் தென்மாவட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கித் தந்தது மட்டுமல்லாது, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரியை உருவாக்கி தந்தும், மதுரை மாநகர் பகுதிக்கு 1,200 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணியினை தந்திட்டது மட்டுமல்லாது, மதுரை மாவட்டத்திற்கு 30 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்களையெல்லாம் மூன்றே ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்களை தந்திட்டுள்ளார்  நீர் மேலாண்மையில் ஒரு புரட்சியை உருவாக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செய்து அதன் மூலம் தமிழகத்தின் நிலத்தடி நீரை உயர் செய்து வாழும  கரிகால சோழனாக முதல்வர்  திகழ்ந்து வருகிறார் 

தொடர்ந்து தென்மாவட்ட மக்களின்,வளர்ச்சிக்காக கிள்ளி கொடுத்தால் போதாது என்று அள்ளி அள்ளி வழங்கி வரும் முதல்வர் இரண்டு நாள் பயணமாக தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கிறார்.  29-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கை ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கு ஆறுதல் கூறி பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்கிறார் முதல்வர்.   

அதனை தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் மதுரை, மாவட்டத்திற்கு வருகை தந்து பசும்பொன் தேவர் திருமகனார் குருபூஜையில் பங்கேற்க வருகின்ற 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர். 

இதனைத் தொடர்ந்து தென் மாவட்ட மக்களின் நன்றியை உரிதாக்கும் வகையிலும், இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிக முதலீட்டை ஈர்த்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாகி தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாரதப் பிரதமர் மூலம் பாராட்டைப் பெற்று அதன் மூலம் தமிழகத்திற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மாநில அம்மா பேரவையின் சார்பிலும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சாதனைத் திட்டங்களை முன்னிறுத்தி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி வாகை சூடிடும் என்று எதிர்க்கட்சிகளே புறமுதுகிட்டு ஓடிடும் வகையில் வகையில்  மாபெரும் நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது,

 தமிழகம் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது என்று நடிகர் கமல் கருத்து கூறியுள்ளார். வல்லரசு நாடுகள் கூட வெள்ளத்தில் தவித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன் கூட்டியே ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதில் வெள்ளம் வரும் முன், வெள்ளம் வரும்போதும் , வெள்ளம் நீர் வடிந்த பின்பு என்று மூன்று நிலைகளைப் பிரித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். மேலும் நீர் தேங்கும் பகுதிகளில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

காணொலி முலம் அறிக்கை வெளியிடுவதை விட களத்தில் வந்து பார்க்கவேண்டும். அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். தற்போதைய ஆட்சியில் நீர்நிலைகள் மிகச்சிறப்பாக தூர்வாரப்பட்டு உள்ளன. எதிரிகள் எல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்பது போல வடகிழக்குப் பருவ மழையிலும் மீன் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள். 

தேர்தல் காலம் என்பதால் அரசை எப்படியாவது எந்த வகையிலாவது குறை சொல்ல வேண்டும் என குறை கூறுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் என காத்திருக்கிறோம்.

இந்த விவகாரத்தில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றனர். எந்த வேலையும் செய்யாமல் பங்களிப்பில் எங்களுக்கும் உள்ளது என்று தி.மு.க. செய்து வருகின்றனர். பெற்ற பிள்ளைக்கு தான் பெயர் வைக்க முடியும். பெறாத பிள்ளைக்கு எப்படி பெயர் வைக்க முடியும். அப்படித்தான் தி.மு.க.வின் நிலைப்பாடாகும் 

அதிமுக அரசு மீது மாணவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. டி.ஜி.பி. விவகாரத்தில் நிர்வாக வசதிக்காக எடுக்கப்படும் காரணங்களை விமர்சனம் செய்யக்கூடாது. வாரிசு என்ற அடையாள அட்டையை கொண்டு அ.தி.மு.க.வில் பதவி தருவது கிடையாது.

அதிகமான இளைஞர்களை சட்டப்பேரவையில் கொண்டது அ.தி.மு.க. மட்டுமே, இளைஞர்களுக்கு அட்சய பாத்திரம் போல் அள்ளி அள்ளி வாய்ப்புகளை தருகிற ஒரே இயக்கமாக உள்ளது. அம்மாவிற்கு பிறகு அ.தி.மு.க. எஃகு கோட்டையாக உள்ளது. கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. நடிகர் விஜய் எல்லாம் மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க உரிமையுள்ளது. அவர் இயக்கம் சார்ந்த நிர்வாகிகளை சந்திப்பது விவாதிப்பதற்கு உரியது அல்ல,

நடிகர் விஜய் நிர்வாகிகளை சந்திப்பதில் அதைத் தாண்டி யோசிப்பதற்கு ஒன்றுமில்லை, பத்தாண்டு காலமாக கோட்டை பக்கம் வராமல் அதிகார பசியோடு தி.மு.க.வினர் உள்ளனர் எனவும் திமுகவின் காட்டு தர்பார் குடும்ப அதிகார மையம் அதிகார குறுக்கீடு அதிகார துஷ்பிரயோகம் நில அபகரிப்பு சட்டம் ஒழுங்கு சீரழிவு மின்தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் மக்கள் மனதில் பசுமையாக உள்ளது. வருகின்ற 29 மற்றும் 30 தேதிகளில் தென் தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு வருகை தர உள்ளார் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து