தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      இந்தியா
Sivasankaran 2020 10 28

Source: provided

திருவனந்தபுரம் : கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கத்துறை கைது செய்தது. 

கேரள ஐகோர்ட்டில் சிவசங்கரன் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் மீது நடந்த விசாரணையில், முன்ஜாமின் வழங்க கூடாது என அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷின் நடவடிக்கைகள் சிவசங்கரனுக்கு தெரியும் என விசாரணை தரப்பில் வாதிடப்பட்டது. 

முன்ஜாமின் மனு தள்ளுபடியானதும், திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிவசங்கரன் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து