மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் வி.எம். கடோச் : மத்திய அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      இந்தியா
central-government 2020 10 28

Source: provided

புதுடெல்லி : மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக வி.எம். கடோச்சை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மதுரை அருகே உள்ள தோப்பூரில் ரூ. 1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த மருத்துவமனையின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மே மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. 

இந்தநிலையில், மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வி.எம்.கடோச் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றி வருகிறார். 

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து