தமிழகத்தில் தொடர்ந்த வீழ்ச்சியடையும் கொரோனா தொற்று பாதிப்பு

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      தமிழகம்
Radhakrishnan 2020 10 28

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, குறிப்பிடத்தக்க அளவுக்கு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில், 3 ஆயிரத்து 859 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 35 பேர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி, சென்னை - கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

சென்னையில், கொரோனா பாதிப்பு நன்றாகவே குறைந்துவரும் நிலையில், புதிதாக 688 பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் 218 பேருக்கும், செங்கல்பட்டில் 150 பேருக்கும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து