முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன் வருகை தரும் முதல்வர் எடப்பாடிக்கு மதுரையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஏற்பாடு

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : பசும்பொன் செல்லும் வழியில் இன்று மாலை மதுரை வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்து வருகிறார். 

மதுரைக்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை செயலாளர் சி.தங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் மண்டல தலைவர் சண்முகவள்ளி,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், முன்னாள் மேயர் பட்டுராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாத்துரை, பகுதி கழக செயலாளர்கள் கே.ஜெயவேல், அண்ணாநகர் எம்.என்.முருகன், எம்.செந்தில்குமார், பைக்காரா கருப்பசாமி, தளபதி மாரியப்பன், மகளிரணி செயலாளர் பெ. இந்திராணி, அணி செயலாளர்கள் சோலைராஜா, பாசறை அரவிந்தன், ஐ.டி.விங்க் மாணிக்கம், புதூர் சுந்தரா, வக்கீல் சுரேஷ் மற்றும் பி.ஆர்.சி.ஜெயராஜ், ஏ.சுகந்தி அசோக், அனுப்பானடி பாலகுமார், ஏ.வி.எஸ்.பிரிட்டோ, இலக்கிய அணி முனியசாமி, புதூர் அபுதாகீர், பெரியசெல்வம், சாய், பாசறை சிலம்பரசன், கனகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சியை கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலiமைச்சர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அமைக்க, கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்ததை மதுரை மாநகர் மாவட்ட கழகம் வழிமொழிந்து மதுரை மாநகரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அயராது பாடுபட்டு வெற்றிக்கனியை பெறுவோமென மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக தீர்மானிக்கபடுகிறது.

மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர் பற்றாக்குறையை நீக்கி 24மணி நேரமும் முல்லை பெரியாற்றிலிருந்து மதுரை மாநகருக்கு ரூ.1020 - கோடி செலவில் இரும்பு பைப்லைன் அமைத்து அடுத்த 60 ஆண்டுகளுக்கு மதுரை மாநகரின்  தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்யும் திட்டத்தின் மூலம் வைகை ஆற்றினை தூய்மைபடுத்தியும், வைகை ஆற்றின் இரு புறங்களிலும் சாலை வசதிகள் மற்றும் பூங்கா அமைத்து வைகை ஆற்றை அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் திட்டங்களை தீட்டி நிதி ஒதுக்கீடு செய்து, மதுரை மாநகரின் வளர்ச்சிக்காக பாலங்கள் மற்றும் பல்வேறு நீண்டகால திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும் மதுரை மாவட்ட கழகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து